பிபர்ஜாய் புயல் பாதிப்பு: 'போர்கால அடிப்படையில் ரெயில் பாதை சீரமைக்கும் பணி' - அஸ்வினி வைஷ்ணவ்


பிபர்ஜாய் புயல் பாதிப்பு:  போர்கால அடிப்படையில் ரெயில் பாதை சீரமைக்கும் பணி - அஸ்வினி வைஷ்ணவ்
x

பிபர்ஜாய் புயலால் ராஜஸ்தானில் 5 இடங்களில் தண்டவாளங்கள் சேதம் அடைந்துள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான அதி தீவிர புயலான பிபர்ஜாய், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே, 140 கி.மீ., வேகத்தில் பலத்த மழையுடன் கடந்த 15-ம் தேதி கரையைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் பல இடங்களில் கனமழை பெய்தது.

இந்தநிலையில் பிபர்ஜாய் புயல் குறித்து, ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பிபர்ஜாய் புயலால் ராஜஸ்தானில் 5 இடங்களில் தண்டவாளங்கள் சேதம் அடைந்துள்ளது. சேதமான தண்டவாளங்களை சீரமைக்கும் பணி போர்கால அடிப்படையில் நடைபெறுகிறது. சேதமான வழிதடத்தில் செல்லவிருந்த ரயில்கள் உடனடியாக வேறு பாதைக்கு மாற்றப்பட்டன எனக் கூறினார்.


Next Story