ராஜஸ்தானில் 3 நகரங்களில் 5ஜி சேவை


ராஜஸ்தானில் 3 நகரங்களில் 5ஜி சேவை
x

ராஜஸ்தான் மாநிலத்தில் 5ஜி இணைய சேவையை முதல்-மந்திரி அசோக் கெலாட் தொடங்கிவைத்தார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் 5ஜி இணைய சேவையை முதல்-மந்திரி அசோக் கெலாட் நேற்று தொடங்கிவைத்தார்.

ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதய்ப்பூர் நகரங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி அசோக் கெலாட் பேசுகையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத்துறையில் புரட்சிகரமான புதிய படியாக 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அதிவேக சேவையினால், நல்ல நிர்வாகம், வெளிப்படைத்தன்மை, பொறுமைப்புடைமை என்ற கனவு மேலும் வலுப்படுத்தப்படும்.

அதேநேரம், அதிகரித்துவரும் இணைய மோசடிகள், சவால்கள் குறித்து ஆன்லைன் பயனாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.'

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story