ராஜஸ்தான்: குடியரசு தின விழாவுக்கு குடிபோதையில் வந்த அரசு பள்ளி முதல்வர்
இதுபற்றிய தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் மோடி உடனடியாக அவரை பணியில் இருந்து சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டு உள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் நகார் மாவட்டத்தில் பார்பத்சார் பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இதன் முதல்வராக அரவிந்த் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், குடியரசு தினத்தன்று அரசு பள்ளியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பள்ளி மாணவர்கள் குடியரசு தின விழாவுக்கு ஆவலுடன் வந்திருந்தனர். இந்நிலையில், அரசு பள்ளி முதல்வர் குடிபோதையில் விழாவுக்கு வந்திருக்கிறார். இதனால் அவரை பார்த்து மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் மோடி உடனடியாக அவரை பணியில் இருந்து சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவு நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.
Related Tags :
Next Story