ராஜஸ்தான்: தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன் கைது..!

ராஜஸ்தான் மாநிலத்தில் தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன் கைதுசெய்யப்பட்டார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தின் பரான் மாவட்டத்தில் சாப்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெர்கெடா கிராமத்தில் வசிக்கும் 70 வயது நபரை கொலை செய்ததாக அவரது மகன் ஹேம்ராஜ் மீனா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், ஹேம்ராஜ் தனது தந்தையை கோடரியால் கொன்று வயல் பகுதியில் வீசியதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஹேம்ராஜிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இறந்தவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதும், குடிசை அமைத்து தனியாக வசித்து வந்ததும், சட்டவிரோதமாக நாட்டு மதுபானம் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
தந்தையின் இத்தகைய செயல்பாடுகளால், அவரது இளைய மகன் ஹேம்ராஜ் மிகவும் கோபமடைந்தார். மேலும், தனது தந்தை குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறான் என்று உணர்ந்த அவர், தந்தையை கொலை செய்ய திட்டமிட்டு கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஹேம்ராஜை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.