டெல்லி 'ராஜபாதை' இனி 'கடமைபாதை' என பெயர் மாற்ற மத்திய அரசு முடிவு?
குடியரசு, சுதந்திர தின அணிவகுப்பு நடைபெறும் முக்கிய பகுதிகளின் பெயர்களை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் குடியரசு தினம், சுதந்திர தின அணிவகுப்பு நடைபெறும் பகுதி ராஜபாதை என அழைக்கப்படுகிறது. இந்த ராஜபாதையில் சுதந்திரதினத்தின் போது முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும்.
இந்நிலையில், ராஜபாதை பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராஜபாதை மற்றும் சென்ரல் விஸ்டா தோட்டப்பகுதி ஆகிவற்றை உள்ளடக்கிய பகுதிகளை ஒன்றிணைத்து கடமைபாதை (கர்த்தவியா பாதை) என பெயர் மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story