மைனர்பெண் பாலியல் பலாத்காரம்


மைனர்பெண் பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:16:38+05:30)

மூடிகெரேயில் மைனர்பெண் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோவில் கைது செய்தனர்.

சிக்கமகளூரு:-

மைனர் பெண் பலாத்காரம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெேர தாலுகா பனகல் அருகே சபலி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 35). விவசாயி. இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது உறவினரின் 16 வயது மைனர்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. மைனர்பெண், அந்தப்பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மைனர்பெண்ணை சந்திரசேகர் தனது வீட்டுக்கு அழைத்து வந்து, ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

வாலிபர் கைது

ஆனால் அந்த மைனர்பெண், நடந்த சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து பனகல் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர். மேலும், சந்திரசேகருக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. அதில், சந்திரசேகர், மைனர்பெண்ணை பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story