டெல்லி உயிரியியல் பூங்காவில் அரிய வகை வெள்ளை புலி குட்டிகள் திறந்து விடப்பட்டன


டெல்லி உயிரியியல் பூங்காவில் அரிய வகை வெள்ளை புலி குட்டிகள் திறந்து விடப்பட்டன
x

டெல்லி உயிரியியல் பூங்காவில் அரிய வகை வெள்ளை புலி குட்டிகளை மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் திறந்து விட்டு உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள உயிரியியல் பூங்காவில் அரிய வகை வெள்ளையின புலி குட்டிகளை திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறைகளுக்கான மந்திரி பூபேந்தர் யாதவ் இன்று கலந்து கொண்டார்.

அவருடன் அரசு உயரதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதன்பின் மத்திய மந்திரி கொடியசைத்து வைத்து, வெள்ளையின புலி குட்டிகளை அதற்கான நிலப்பகுதிகளில் திறந்து விடும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்படி தாய் புலி சீதா மற்றும் அவற்றுடன் 2 புலி குட்டிகள் திறந்து விடப்பட்டு உள்ளன. அவை கோடை வெப்பம் தணியும் வகையில், அமைக்கப்பட்டு இருந்த, தூய்மைப்படுத்தப்பட்ட நீர்நிலையில் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தன. இதனை பார்வையாளர்கள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

எனினும் நாளை ஒரு நாள் டெல்லி பூங்கா மூடப்பட்டு இருக்கும். அந்த புலி குட்டிகள், அவற்றின் தாய் அந்த பகுதியில் தங்களுடைய வாழ்விடங்களாக அமைத்து கொள்வதற்காக இந்த நேரஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என பூங்கா இயக்குநர் ஆகான்க்சா மகாஜன் கூறியுள்ளார்.

அவற்றுக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சியும் இன்று நடைபெறும் என கூறப்படுகிறது. தற்போது, இந்த உயிரியியல் பூங்காவில் 5 வெள்ளை புலிகள் உள்பட மொத்தம் 9 புலிகள் உள்ளன.


Next Story