மலை மாதேஸ்வரா கோவிலில் ரத உற்சவம்
மலை மாதேஸ்வரா கோவிலில் ரத உற்சவம் நாளை நடக்கிறது.
கொள்ளேகால்:
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் மாதேஸ்வரன் மலைப்பகுதியில் மலை மாதேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி தினத்தன்று ரத உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று இருந்ததால் எளிமையான முறையில் கோவிலில் ரத உற்சவம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இந்தாண்டு வெகு விமர்சியாக ரத உற்சவ விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தாண்டு ரத உற்சவம் 26-ந் தேதி(நாளை) நடக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதில் பெடகம்பனா சமூகத்தை சேர்ந்த 108 பெண்களால் நடத்தப்படும் ஹாலரவி திருவிழா மற்றும் மகாரதஉற்சவம் தீபாவளி பண்டிகையின் முக்கியமான கொண்டாட்டங்களாகும். ஹாலரவி உற்சவம் இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story