ரெப்போ வட்டி விகிதம் உயர்வு- தனிநபர் கடன், வாகன கடன் வட்டி உயர வாய்ப்பு

ANI
வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளீயிட்டு உள்ளது.
புதுடெல்லி
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று ரெப்போ விகிதத்தை - அல்லது முக்கிய கடன் வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தினார். ரிசர்வ் வங்கிகடந்த மூன்றாண்டுகளில் அதிகபட்சமாக 5.9 சதவீதமாக அறிவித்துள்ளது.
மேலும் அவர் கூறியதாவது;-
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்பார்ப்புகளை விட குறைவாக இருந்தபோதிலும் முதல் காலாண்டில் ஜிடிபி ஆண்டுக்கு ஆண்டு 13.5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
உலகப் பொருளாதாரம் சிக்கலில் உள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா அதிர்ச்சிகளைத் தாங்கியுள்ளது. பணவீக்கம் 7 சதவீதமாக உள்ளது மற்றும் ஆண்டின் இரண்டாம் பாதியில் 6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறினார்.
Related Tags :
Next Story