பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து மாணவர்கள் அஞ்சல் அட்டைகளை அனுப்ப வேண்டும் - யோகி ஆதித்யநாத்


பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து மாணவர்கள் அஞ்சல் அட்டைகளை அனுப்ப வேண்டும் - யோகி ஆதித்யநாத்
x

Image Courtesy : PTI

செய்தித்தாள்களை தவறாமல் மாணவர்கள் படிக்க வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

லக்னோ,

12 ஆம் வகுப்பு மாநில தேர்வில் வெற்றி பெற்ற 10 சிறந்த மாணவர்களுடன் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உரையாடலில் கலந்து கொண்டார். அவரது இல்லத்தில் நடைபெற்ற உரையாடலின் போது அவர் மாணவர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கினார்.

பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் நூலகங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் செய்தித்தாள்களை தவறாமல் மாணவர்கள் படிக்க வேண்டும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

மாணவர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அந்த திட்டங்களுக்காக மாணவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து அஞ்சல் அட்டைகளை அனுப்ப வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். செய்தித்தாள்களைப் படிப்பதன் மூலம், வரவிருக்கும் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார் நிலையில் இருக்கலாம் என அவர் அறிவுறுத்தினார்.


Next Story