அசாம் வெள்ள நிவாரணமாக ரூ.51 லட்சம் வழங்கிய சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்!


அசாம் வெள்ள நிவாரணமாக ரூ.51 லட்சம் வழங்கிய சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்!
x

அசாமில் வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்அசாமில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கவுகாத்தி,

மராட்டியத்தில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள விடுதியில் கடந்த சில நாட்களாக தங்கியுள்ளனர்.

அதேநேரத்தில், அசாமில் வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்அசாமில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

அசாம் வெள்ளத்திற்கு 28 மாவட்டங்களை சேர்ந்த 2,894 கிராமங்களில் வசிக்கும் 25.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டதன் கார்ணமாக இந்த எண்ணிக்கை தற்போது 21 லட்சமாக குறைந்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் வெள்ள நிவாரணத்திற்கு அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் ரூ.51 லட்சம் நிவாரணத் தொகை வழங்கினர்.

.இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மாநில மக்களுக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் அசாம் முதல்-மந்திரி வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.51 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.


Next Story