மங்களூரு மாநகராட்சியில், குடிநீர் கட்டணம் குறைப்பு; மாநில அரசு ஒப்புதல்


மங்களூரு மாநகராட்சியில், குடிநீர் கட்டணம் குறைப்பு; மாநில அரசு ஒப்புதல்
x

மங்களூரு மாநகராட்சியில், குடிநீர் கட்டணம் குறைப்புக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மங்களூரு;

மங்களூரு மாநகராட்சி

தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு மாநகராட்சி உள்ளது.

மங்களூரு மாநகராட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு வணிக மற்றும் கட்டுமான பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் வரி உயர்த்தப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில் 2019-ம் ஆண்டு குடிநீர் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மாதந்தோறும் 20,000 லிட்டர் வரை குடிநீர் பயன்படுத்தும் நுகர்வோருக்கு குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.174 ஆக உயர்த்தியது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து 174 ரூபாயில் இருந்து 140 ரூபாயாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் இந்தாண்டு மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்படாமலும், பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமலும் குடிநீர் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

மாநில அரசு ஒப்புதல்

இந்த கட்டண பட்டியலை தயார் செய்த அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி ஒப்புதலுக்கு மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை பரிசீலனை செய்த மாநில அரசு, மங்களூரு மாநகராட்சியின் புதிய குடிநீர் கட்டணத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி 20,000 லிட்டர் வரை தண்ணீர் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 74 ரூபாயும், 70,000 லிட்டர் வரை பயன்படுத்துவோருக்கு குறைந்தபட்ச கட்டணத்தில் 29 ரூபாயும் குறைக்கப்படும். ஆனால் மாதத்திற்கு 1.5 லட்சம் லிட்டர் பயன்படுத்துபவர்கள் முன்பேவிட 50 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குடிநீர் கட்டணம் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், ஓராண்டிற்கு அமலில் இருப்பதாகவும் மங்களூரு மாநகராட்சி நிர்வாகம் ெவளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story