கடந்த 8 ஆண்டு கால சீர்திருத்தங்களால் இந்தியாவில் வர்த்தகம் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்!


கடந்த 8 ஆண்டு கால சீர்திருத்தங்களால் இந்தியாவில் வர்த்தகம் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்!
x

எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும் கடந்த 8 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் பற்றிய விவரங்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

புதுடெல்லி,

தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும் கடந்த 8 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் பற்றிய விரிவான விவரங்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

மத்திய அரசால் 'தொழில் ஊக்குவிப்பு, எளிதான வர்த்தகம் மற்றும் பரவலான செழிப்பை பரப்பவும்' கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களை, பிரதமரின் மைகவ் எனப்படும் 'எனது அரசு' என்ற சுட்டுரை தொடர் மற்றும் அவரது இணையதளம் மற்றும் 'நமோ செயலி' ஆகியவற்றில் இருந்து கட்டுரைகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.

பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது: "வளர்ச்சியின் வேகத்திற்கு தடையாக இருந்த பல்வேறு வழக்கற்ற சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அதேவேளையில், 'சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம்' என்ற கோட்பாட்டால் வழிநடத்தப்பட்டு, 'எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை' மேம்படுத்தும் ஏராளமான சீர்திருத்தங்களை இந்திய அரசு கொண்டு வந்துள்ளது."

8 ஆண்டு கால சீர்திருத்தங்கள் என்று குறிப்பிட்டு இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


Next Story