பத்ரா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


பத்ரா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
x

சிக்கமகளூருவில் நீர்வரத்து அதிகரிப்பால் பத்ரா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகாவில் உள்ளது பத்ரா ேமலணை. இதன் மொத்த நீர்மட்டம் 186 அடியாகும். தற்போது மலைநாடு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இந்த அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 43,051 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து 183 அடியை எட்டியுள்ளது. வழக்கமாக இந்த அணையில் 180 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பிவிட்டால், உடனே உபரிநீர் திறந்துவிடுவது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் அணையோரத்தில் வசித்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதாவது அணையை ஒட்டி வசித்து வரும் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், கால்வாய் மற்றும் அணைகளின் அருகே செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி அணையில் இருந்து வினாடிக்கு 1037 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பத்ரா அணையை ஒட்டிய மதுகதே குளம், அய்யன்கெரே ஏரிகள் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story