காங்கிரஸ் ஆட்சியில் மதமாற்றம் திட்டமிட்ட முறையில் நடைபெறுகிறது - பாஜக தலைவர்
திருமணம் செய்த உடன் 11 தம்பதிகள் தாங்கள் புத்த மதத்திற்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தின் பாரத்பூர் மாவட்டம் கும்ஹர் பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை 11 புதுமண தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்து மதத்தின் தலித் சமுகத்தை சேர்ந்த இந்த தம்பதிகள் திருமணம் செய்த உடன் தாங்கள் புத்த மதத்திற்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர்.
திருமணமான கையோடு இந்து மதத்தை சேர்ந்த தம்பதிகள் குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறுவது தொடர்பான உறுதிமொழி வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் புனியா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இதற்கு முன்பும் மத மாற்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. ஆனால், தற்போது மத மாற்ற சம்பவங்கள் மிகுந்த திட்டமிட்ட முறையில் நடைபெறுகிறது' என்றார்.
Related Tags :
Next Story