சட்டசபை தேர்தலில் தோல்வி எதிரொலி:


சட்டசபை தேர்தலில் தோல்வி எதிரொலி:
x

சிக்கமகளூரு:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜனதா கட்சி 66 இடங்களும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட முன்னாள் மந்திரி ரேணுகாச்சார்யா 74,832 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சாந்தனகவுடா 92,392 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்தநிலையில் சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் மந்திரி ரேணுகாச்சார்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

நான் எனது தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளேன். தொகுதி முழுவதும் வளர்ச்சி பணிகளையும் செய்து உள்ளேன். என்னை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால் ஒன்னாளி தொகுதி மக்கள் எனக்கு வாய்ப்பு அளிக்காததது ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் நான் அதிருப்தியில் உள்ளேன். இனி வருகிற தேர்தலில் போட்டியிட மாட்டேன். தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன். வேட்பாளராக யாரை நிறுத்துகிறார்களோ அவருக்காக தொகுதியில் பணி செய்ய உள்ளேன். மேலும் பா.ஜனதா கட்சிக்காக தொடர்ந்து பாடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story