ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர்வு
ரெப்போ வட்டி விகிதம் 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால வட்டி விகிதம் 0.5% ஆக உயர்ந்துள்ளது . ரெப்போ வட்டி விகிதம் 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த் தாஸ் அறிவித்துள்ளார் .
இதனால் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி மேலும் உயர வாய்ப்புள்ளது.ஏற்கனவே கடந்த மே மாதம் ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் உயர்ந்துள்ளது.
4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம், கடந்த 2 மாதத்தில் மட்டும் 0.9% உயர்ந்துள்ளது .பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ,உக்ரைனில் நடந்த போரால் உலகளாவிய அளவில் பண வீக்கம் அதிகரித்துள்ளது எனவும் சக்தி காந்த் தாஸ் அறிவித்துள்ளார் .
Related Tags :
Next Story