பிரதமர் மோடியின் வீட்டின் மேல் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு


பிரதமர் மோடியின் வீட்டின் மேல் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 July 2023 9:21 AM IST (Updated: 3 July 2023 9:44 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் பறந்தது தொடர்பாக டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று பறந்தது. பாதுகாப்பு படையினர் டெல்லி காவல்துறையை அதிகாலை 5.30 மணிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பிரதமரின் வீட்டின் மேல் ட்ரோன் பறந்தது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி போலீசார் ட்ரோனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை ட்ரோன் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியில் அதிகாலையில் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story