இறைச்சிக்காக வெட்ட கட்டி வைத்திருந்த 12 மாடுகள் மீட்பு


இறைச்சிக்காக வெட்ட கட்டி வைத்திருந்த 12 மாடுகள் மீட்பு
x

பங்காருபேட்டையில் இறைச்சிக்காக வெட்ட கட்டி வைத்திருந்த 12 மாடுகள் மீட்கப்பட்டது.

கோலார் தங்கவயல்;


கோலார் மாவட்டம் பங்காருபேட்டை டவுன் ரஹிம் லே-அவுட் பகுதியில் உள்ள முபாரக் சாதீக் மகால் பின்புறம் உள்ள கூடாரத்தில் மாடுகளை அடைத்து வைத்து இறைச்சிக்காக வெட்ட முயல்வதாக பங்காருபேட்டை தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தாசில்தார் தயானந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு 12 மாடுகள், இறைச்சிக்காக ெவட்ட கட்டி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த 12 மாடுகளையும் அதிகாரிகள் மீட்டு கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பங்காருபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடுகளை இறைச்சிக்காக வெட்ட கட்டி வைத்திருந்தவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story