சாலையில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற 18 பேர் மீட்பு


சாலையில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற 18 பேர் மீட்பு
x

சிக்கமகளூரு டவுன் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற 18 பேரை நகரசபை குழுவினா் மீட்டனர்.

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு நகரசபை சார்பாக வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் அரசு ஆதரவற்றோர் பாதுகாப்பு மையம் கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. சாலை, பஸ் நிறுத்தங்களில் நடமாடும் ஆதரவற்றவர்களை மீட்பதற்காகநகரசபைசார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


இந்த குழுவினர் சாலையில் சுற்றித்திரிபவர்களை மீட்டு அவர்களை பாதுகாப்பு மையத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு நகரசபை சார்பில் உணவு, உடை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நகரசபை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு நகரசபைக்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சாலையில் சுற்றித்திரிந்ததாக 18 பேரை மீட்டனர். விசாரணையில் அவர்களுக்கு ஆதரவாக யாரும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அவர்களை மீட்டு, ஆதரவற்றோர் பாதுகாப்பு மையத்தில் தங்க வைத்துள்ளனர்.

மேலும், சாலையில் ஆதரவற்றவர்களை கண்டால் உடனடியாக நகரசபைக்கு தகவல் தெரிவிக்குமாறு, பொதுமக்களிடம் கூறப்பட்டுள்ளது. நகரசபையின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Next Story