ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது குழந்தை - மீட்பு பணிகள் தீவிரம்


ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது குழந்தை - மீட்பு பணிகள் தீவிரம்
x

விளையாடிக்கொண்டிருந்த சிறுமி 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் சிஹொரி மாவட்டம் மொங்ஹலி கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் குஷ்வாகா. இவருக்கு 3 வயதில் ஸ்ரீருஷ்தி என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில், சிறுமி ஸ்ரீருஷ்தி நேற்று மதியம் 1 மணியளவில் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கி இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுமி ஸ்ரீருஷ்தி தவரி விழுந்தார்.

30 அடி ஆழம் உள்ள கிணற்றுக்குள் சிறுமி தவறி விழுந்துள்ளார். தனது மகள் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுமி 30 அடி ஆழத்தில் உள்ள நிலையில் மீட்புக்குழுவினர் புல்டோசர் மூலம் அருகில் உள்ள பகுதியை தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் 20 அடி ஆழத்திற்கு கீழ் முழுவதும் பாறைகளாக உள்ளதால் மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Next Story