ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் இட ஒதுக்கீடு


ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் இட ஒதுக்கீடு
x

ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் அக்னி வீரர் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணிபுரிய முடியும் என்றும் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே பின்னர் முழுமையாக பணியில் நீட்டிக்கப்படுவார்கள் என்றும் பிறர் விடுவிக்கப்பட்டு வேறு பணிகளுக்கு செல்ல வேண்டும் என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கு பிற பணிகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் படி துணை ராணுவங்களில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக எல்லை பாதுகாப்பு படை சட்டம் 141-வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும், வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் வயது உச்சவரம்பிலும் தளர்வு அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்னி வீரர்களாக அதிகமானோரை உருவாக்கும் வகையில் மத்திய அரசு இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Next Story