சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டுப்பாடு - மத்திய சுகாதாரத்துறை


சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டுப்பாடு - மத்திய சுகாதாரத்துறை
x

சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100% கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகள் கொரோனா பாதிப்பின்மை சான்றிதழை பதிவேற்றும் நடைமுறையை மத்திய அரசு நேற்று (ஜனவரி 1) முதல் கட்டாயமாக்கியுள்ளது.

இந்த நிலையில், உருமாறிய கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்கங் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100% கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

விமான பயணிகள் 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகடிவ் என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 6 நாடுகளில் இருந்து வேறு எந்த நாடுகளுக்கு சென்று விட்டு இந்தியா வந்தாலும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story