ஓய்வு பெற்ற நீதிபதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஓய்வு பெற்ற நீதிபதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்
பாகல்கோட்டை: பாகல்கோட்டை மாவட்டம் நவநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் மானப்பா தலவாரா (வயது 53). ஓய்வு பெற்ற நீதிபதி. கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தாலுகா கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றிய அவர் சமீபத்தில் கட்டாய ஓய்வு பெற்றிருந்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டில் தனியாக இருந்த மானப்பா திடீரென்று தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நவநகர் போலீசார் விரைந்து வந்து நீதிபதியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். மானப்பாவுக்கு இரண்டு மனைவிகள். அவர்களில் ஒருவர் பெங்களூருவில் நீதிபதியாக இருக்கிறார், மற்றொரு மனைவியுடன் அவர் நவநகரில் வசித்து வந்தது தெரியவந்தது. அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து நவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






