பொட்டு வைக்காதவங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன்.. பெண் பத்திரிகையாளரிடம் வலதுசாரி தலைவர் சர்ச்சை பேச்சு


பொட்டு வைக்காதவங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன்.. பெண் பத்திரிகையாளரிடம் வலதுசாரி தலைவர் சர்ச்சை பேச்சு
x

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த வலது சாரி தலைவர் சம்பஜி பிடே நேற்று அம்மாநிலத்தின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசினார்

மும்பை,

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த வலது சாரி தலைவர் சம்பஜி பிடே நேற்று அம்மாநிலத்தின் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசினார். மந்திரலாயாவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு பிறகு வெளியா வந்த சம்பஜி பிடேவிடம் பெண் பத்திரிகையாளரிடம் கேள்வி எழுப்ப வந்தார்.

ஆனால், பெண் பத்திரிகையாளருக்கு பேட்டி கொடுக்க மறுத்த சம்பஜி பிடே, என்னிடம் பேட்டி கேட்டு வருவதற்கு முன்பாக நெற்றியில் பொட்டு வைத்து விட்டு வர வேண்டும். உங்களுக்கு என்னால் பேட்டி கொடுக்க முடியாது. ஒரு பெண் பாரத மாதாவுக்கு நிகரானவள். எனவே பொட்டு வைக்காமல் விதவை போல காட்சியளிக்ககூடாது என்று பிடே கூறுகிறார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பஜி பிடேவின் இத்தகைய பேச்சு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இதனிடையே, இந்த விவகாரம் மாநில மகளிர் ஆணையம், சம்பஜி பிடே தனது சர்ச்சை கருத்து தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Next Story