ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது தவறி விழுந்த பெண் - வேகமாக செயல்பட்டு காப்பாற்றிய பெண் காவலர்


ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது தவறி விழுந்த பெண் - வேகமாக செயல்பட்டு காப்பாற்றிய பெண் காவலர்
x

ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது தவறி விழுந்த பெண்ணை வேகமாக செயல்பட்டு ரெயில்வே பெண் காவலர் ஒருவர் காப்பாற்றினார்.

வாரங்கல்,

தெலுங்கானாவில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் பயணி ஒருவர் நடைமேடைக்கும் ரெயிலுக்கும் இடையே விழுந்தார். அவரை அங்கிருந்த ரெயில்வே பெண் காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.

வாரங்கல் ரெயில் நிலையத்தில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை ரெயில்வே பாதுகாப்புப்படை தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில் ஓடும் ரெயிலில் இருந்து பெண் ஒருவர் இறங்க முயன்ற போது திடீரென விழுந்தார். அப்போது அங்கு நடைமேடையில் நின்றிருந்த ரெயில்வே பெண் காவலர் சோனாலி வேகமாக செயல்பட்டு தண்டவாளத்தில் விழாமல் இழுத்து அந்த பெண்ணை காப்பாற்றினார்.


Next Story