இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்ற இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி ரொக்கப்பரிசு: ஒடிசா முதல் மந்திரி அறிவிப்பு


இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்ற இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி ரொக்கப்பரிசு: ஒடிசா முதல் மந்திரி அறிவிப்பு
x

கோப்புப்படம் 

இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நடந்த கண்டங்களுக்கு இடையிலான (இன்டர்கான்டினென்டல் கோப்பை) 3-வது சர்வதேச கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் லெபனானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது.

கோப்பையை கைப்பற்றிய இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

இந்த பரிசுத் தொகையில் இருந்து ரூ.20 லட்சத்தை சமீபத்தில் ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கான நிவாரண நிதிக்கு வழங்குவதாக இந்திய கால்பந்து அணியினர் கூறியுள்ளனர்.


Next Story