முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீட்டின் அருகே ரூ.10 லட்சம் சிக்கியது


முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீட்டின் அருகே ரூ.10 லட்சம் சிக்கியது
x

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீட்டின் அருகே ரூ.10 லட்சம் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு:-

கர்நாடகத்தில் வருகிற 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் படையினர், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் சோதனையில் இதுவரை ரூ.250 கோடிக்கும் அதிகமான பரிசுப்பொருட்கள், ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீட்டின் அருகே உள்ள சாலையில் காரில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.10 லட்சம் சிக்கி உள்ளது. பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீடு உள்ளது. அந்த சாலையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை அதிகாரிகள் மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.10 லட்சம் இருந்தது. அதுகுறித்து காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் வியாபாரி என்றும், வேலை தொடர்பாக அந்த பணத்தை எடுத்து செல்வதாகவும் கூறினர். ஆனால் அவற்றுக்கு ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.10 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story