தொழில் அதிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி


தொழில் அதிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 15 March 2023 10:45 AM IST (Updated: 15 March 2023 10:48 AM IST)
t-max-icont-min-icon

பணம் இரட்டிப்பு செய்து கொடுப்பதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

மங்களூரு-

பணம் இரட்டிப்பு செய்து கொடுப்பதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

பணம் இரட்டிப்பு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர் வசந்த் டிசோசா. சொந்தமாக தொழில் செய்து வருகிறார். கடந்த 4-ந் தேதி இவரது செல்ேபான் வாட்ஸ் அப் செயலிக்கு மர்ம நபர் ஒருவர் குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அதை வசந்த் டிசோசா திறந்து பார்த்தபோது, பணம் இரட்டிப்பு செய்து தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது ரூ.150 செலுத்தினால், ரூ.300 கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அத்துடன் ஒரு இணையத்தள

லிங்கும் அனுப்பபட்டிருந்தது. அந்த லிங்கை வசந்த் டிசோசா கிளிக் செய்தபோது, அதில் பணம் இரட்டிப்பு குறித்த தகவல் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் இருந்தது. அந்த வங்கி கணக்கிற்கு முதலில் ரூ.150 முதல் ரூ.200 வரை செலுத்தினார். அந்த பணம் செலுத்தப்பட்ட மறு நிமிடமே வசந்த் டிசோசாவின் வங்கி கணக்கிற்கு பணம் இரட்டிப்பாக வந்தது. இதையடுத்து வசந்த் டிசோசாவிற்கு பணத்தாசை ஏற்பட்டது. ரூ.2,800 மற்றும் ரூ.9 ஆயிரம் செலுத்தினார். அப்போது மர்ம நபரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் திருப்பி அனுப்பபட்டது.

ரூ.15.34 லட்சம் மோசடி

இதை தொடர்ந்து வசந்த் டிசோசா அந்த நபர் அனுப்பிய இணையத்தளத்தில் பணம் செலுத்தினார்.அதாவது 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை ரூ.15.34 லட்சத்தை பல்வேறு தவணைகளாக மர்ம நபருக்கு அனுப்பி வைத்தார். அந்த பணத்தை பெற்று கொண்ட மர்ம நபர், பின்னர் எந்த தகவலும் அனுப்பவில்லை. குறிப்பாக பணம் இரட்டிப்பாக வழங்கவில்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த வசந்த் டிசோசா, சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தார். ஆனால் அவரது செல்போன் சுவிட்- ஆப் செய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து தான் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த வசந்த் டிசோசா, மங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story