தாவோஸ் பொருளாதார மாநாட்டில் ஒப்பந்தம்: கர்நாடகத்தில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு


தாவோஸ் பொருளாதார மாநாட்டில் ஒப்பந்தம்: கர்நாடகத்தில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு
x

பெங்களூரு:

கா்நாடகத்தில் தனியார் நிறுவனம் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

30 ஆயிரம் பேருக்கு வேலை

சுவிட்சா்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டுள்ளார். இதில் தொழில் நிறுவனங்களின் தலைவர்களை பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து பேசி முதலீடுகளை ஈர்த்து வருகிறார். நேற்று மாநாட்டில் 'ரென்யூ' மின் உற்பத்தி நிறுவனத்துடன் கர்நாடக அரசு தொழில்துறை ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் நடைபெற்றது.

இதில் அந்த தனியார் நிறுவனம் அடுத்த 7 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேட்டரி கிடங்கு, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி நிலையங்களை அந்த நிறுவனம் அமைக்கிறது. இந்த முதலீடு மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தகவல் மையம்

மேலும் பார்தி நிறுவனம் கர்நாடகத்தில் பெரிய தகவல் மையம் ஒன்றை அமைக்க முன்வந்துள்ளதாக தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி கூறினார். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் ரமணரெட்டி, முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story