அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்வு - தமிழகத்தில் 25 சதவீதம் அதிகரிப்பு!


அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்வு - தமிழகத்தில் 25 சதவீதம் அதிகரிப்பு!
x

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வரி வசூல் 2-வது முறையாக ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

புதுடெல்லி,

நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,51,718 கோடி வசூலாகியுள்ளது. அக்டோபர் மாத வசூலானது, கடந்த ஏப்ரல் மாதம் வசூலான ரூ.1,67,540 கோடிக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய தொகையாகும்.

இதில் மத்திய சிஜிஎஸ்டி ஆக ரூ.26,039 கோடி, மாநில எஸ்ஜிஎஸ்டி ஆக ரூ.33,396 கோடி, ஒருங்கிணைந்த ஐஜிஎஸ்டி ஆக ரூ.81,778 கோடி (சரக்குகளின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.37,297 கோடி உள்பட), செஸ் வசூலாக ரூ.10,505 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.825 கோடி உட்பட), வசூலாகியுள்ளது.

ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 8-வது முறையாக ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வரி வசூல் 2-வது முறையாக ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் வசூலுடன் ஒப்பிடுகையில், பல மாநிலங்களிலும் ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 25 சதவீதம் உயர்ந்து ரூ.9540 கோடியாக உள்ளது.


Next Story