திருப்பதி கோவிலுக்கான ரூ.300 தரிசன டிக்கெட்: 25-ந்தேதி ஆன்லைனில் வெளியீடு


திருப்பதி கோவிலுக்கான ரூ.300 தரிசன டிக்கெட்: 25-ந்தேதி ஆன்லைனில் வெளியீடு
x

நாளொன்றுக்கு கூடுதலாக 4 ஆயிரம் டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் வரும் 25-ந்தேதி வெளியிட உள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வரும் 25-ந்தேதி ஆன்லைனில் வெளியிட உள்ளது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட்டுகள் நாளொன்றுக்கு 11 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாளொன்றுக்கு கூடுதலாக 4 ஆயிரம் டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் வரும் 25-ந்தேதி வெளியிட உள்ளது. இது தவிர அக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 300 ரூபாய் டிக்கெட்டுகளையும் வரும் 25-ந்தேதி ஆன்லைனில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story