ரூ.500 வச்சா ரூ.2 ஆயிரம்... புரோட்டாவில் மேஜிக்; வைரலான வீடியோ


ரூ.500 வச்சா ரூ.2 ஆயிரம்... புரோட்டாவில் மேஜிக்; வைரலான வீடியோ
x

புரோட்டாவில் ரூ.500 நோட்டு ஒன்றை வைத்து, ரூ.2 ஆயிரம் எடுத்து மேஜிக் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

புதுடெல்லி,

நம்மூரில் இரவு டிபன் கடைகளில் பரவலாக கிடைக்க கூடிய உணவு வகைகளில் புரோட்டாவும் ஒன்று. இது நெய் புரோட்டா, ஆலூ புரோட்டா, கோபி புரோட்டா உள்பட பல வகையாகவும், தேவைக்கேற்பவும் தயார் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

சமீப காலங்களாக இந்த புரோட்டாவை இன்னும் சுவை கூட்டும் வகையில் பல்வேறு முறைகளில் தயாரிக்கின்றனர். அவற்றில் ஐஸ்கிரீம் மற்றும் குக்கீஸ் ஆகியவற்றை ஸ்டப்டு என்ற பெயரில், திணித்து வைத்தும் வகை, வகையாக புரோட்டாக்களை தயாரிக்கின்றனர்.

ஆனால், தற்போது நாம் பார்க்க போவது கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலான புரோட்டா பற்றிய வீடியோவாகும். இதில், ஜானு என்ற பெண்மணி ஒருவர் புரோட்டா தயாரிக்கிறார். அதில், புரோட்டா செய்யும்போது, ரூ.500 கரன்சி நோட்டு ஒன்றை பதித்து வைக்கிறார்.

அதன்பின் அதனை நன்றாக தவாவில் போட்டு சூடுபடுத்துகிறார். எண்ணெய் ஊற்றுகிறார். பின்பு புரோட்டா சாப்பிட தயாரானதும் அதனை, எடுத்து தட்டில் வைக்கிறார். புரோட்டாவை பிரித்து உள்ளே இருந்து ரூ.500 நோட்டுக்கு பதிலாக புதிதாக உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டு ஒன்றை எடுத்து காண்பிக்கிறார்.

இந்த வீடியோவை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டும், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்கும் செய்து உள்ளனர். பலர் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.


Next Story