அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவரை நேரில் சந்தித்து பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!


அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவரை நேரில் சந்தித்து பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!
x

மோகன் பகவத்துடன் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி உட்பட இஸ்லாமிய தலைவர்கள் சந்திப்பு நடத்தினர்.

புதுடெல்லி,

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாமாக உள்ள டாக்டர் இமாம் உமர் அகமது இலியாசியை கஸ்தூரிபா காந்தி மார்க் மசூதியில் இன்று சந்தித்து பேசினார்.

நாட்டில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்த இஸ்லாமிய அமைப்புகளுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இடையேயான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

முன்னதாக, டெல்லியில் இஸ்லாமிய அமைப்பின் தலைவர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை நேற்று சந்தித்தனர். முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, பின்னர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நுபுர் சர்மா விவகாரத்தை தொடர்ந்து, இந்த கூட்டம் நடத்த வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கேட்டு கொண்டதன் அடிப்படையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதில், டெல்லியின் முன்னாள் துணைநிலை கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் லெப்டினன்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா (ஓய்வு), ராஷ்டிரிய லோக்தளம் தேசிய துணைத் தலைவர் ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஷெர்வானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மத நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது மற்றும் சமூகங்களுக்கிடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.


Next Story