மோகன் பகவத்தை 'தேசத் தந்தை' என புகழ்ந்த இஸ்லாமிய அமைப்பு


மோகன் பகவத்தை  தேசத் தந்தை என புகழ்ந்த இஸ்லாமிய அமைப்பு
x
தினத்தந்தி 22 Sep 2022 1:28 PM GMT (Updated: 22 Sep 2022 1:56 PM GMT)

நமது மரபணு ஒன்றுதான், கடவுளை வழிபடும் முறைதான் வேறு என்று மோகன் பகவத் கூறியதாக இமாம் உமர் அகமது இலியாசி தெரிவித்தார்.

புதுடெல்லி,

அகில இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் இமாம் உமர் அகமது இலியாசியை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த உமர் அகமது இலியாசி, "எங்களது அழைப்பை ஏற்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அகில இந்திய இமாம் அமைப்பின் அலுவலகத்திற்கு வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நமது நாட்டின் தந்தை (ராஷ்டிர பிதா)

நான் கேட்டுக்கொண்டதை ஏற்று தாஜ்வீதுல் குரான் மதரசாவை மோகன் பகவத் பார்வையிட்டார். அங்கு பயிலும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, நமது மரபணு ஒன்றுதான் என்றும், கடவுளை வழிபடும் முறைதான் வேறானது என்றும் மோகன் பாகவத் கூறினார்" என்றார்.


Next Story