கோயில், தண்ணீர்,சுடுகாடு அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்- மோகன் பகவத்


கோயில், தண்ணீர்,சுடுகாடு அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்- மோகன் பகவத்
x

கோயில், தண்ணீர்,சுடுகாடு அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்;அற்ப விஷயங்களுக்கு நாம் சண்டையிடக் கூடாது என மோகன் பகவத் கூறினார்.

நாக்பூர்:

தசரா விழாவை முன்னிட்டு நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுலகத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மோகன் பாகவத்கூறியதாவது:-

இந்தியாவின் தற்போதைய தேவை மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டமும் மதம் சார்ந்த சமமற்ற நிலையைத் தடுத்து கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதுமே ஆகும். இவை இரண்டும் அசட்டை செய்யாமல் உடனே கவனிக்கப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் மதம் சார்ந்து மக்கள் தொகையில் சமமற்ற நிலை உருவாகினால் அது தெற்கு சூடான், கொசோவோ நாடுகளில் ஏற்பட்ட நிலையை உருவாக்கும்.

மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப வளங்களும் தேவை. வளங்களைப் பெருக்கும் நடவடிக்கை எடுக்காமல் மக்கள் தொகை அதிகரிப்பதை அனுமதித்தால் அது சுமையாக மட்டுமே உருவாகும்.

ஆனால் அதே வேளையில் மக்கள் தொகை மிகப்பெரிய சொத்தாகவும் கருதப்படுகிறது. மக்கள் தொகை கொள்கையை வகுத்தால் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும்.

மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு பூகோல ரீதியாகவும் எல்லைப் பிரச்சினைகளை உருவாக்கும். இவைதவிர கட்டாய மதமாற்றமும், ஊடுருவலும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

எதிர்காலத்துக்கு ஆங்கிலம் முக்கியம் என்பது கட்டுக்கதை. புதிய கல்விக்கொள்கை மாணவர்களை பண்பட்டவர்களாக, தேசபக்தியால் ஈர்க்கப்பட்ட நல்ல மனிதர்களாக மாற்ற வேண்டும்;

இது அனைவரின் விருப்பம். இதற்கு சமூகம் ஆதரவளிக்க வேண்டும்.

கோயில், தண்ணீர்,சுடுகாடு அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்;அற்ப விஷயங்களுக்கு நாம் சண்டையிடக் கூடாது எனக்கூறினார்.


Next Story