ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சமுதாயத்தில் அமைதியை சீர்குலைக்கும் பணியை செய்கிறது - சித்தராமையா பேச்சு
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சமுதாயத்தில் அமைதியை சீர்குலைக்கும் பணியை செய்கிறது என்று கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்புக்கு தடை விதித்துள்ளது. சமுதாயத்தில் யார் அமைதியை சீர்குலைக்கிறார்களோ அவர்களுக்கு தடை விதிப்பதை நாங்கள் எதிர்க்க மாட்டோம்.
நான் அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், விரோத அரசியலை செய்கிறவர்கள், அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் சமுதாயத்தில் அமைதியை சீர்குலைக்கும் பணியை செய்கிறது. அந்த அமைப்பு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story