மைசூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள்


மைசூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள்
x

புதிய வகை கொரோனா பரவல் காரணமாக மைசூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே ஓட்டல்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மைசூரு:

புதிய வகை கொரோனா பரவல் காரணமாக மைசூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே ஓட்டல்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய வகை கொரோனா

சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய பி.எப்.7 என்ற வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து மாநிலங்களுக்கும், படுக்கை மற்றும் ஆக்சிஜன் தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

இதேபோல், மைசூரு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மைசூரு நகரில் நள்ளிரவு ஒரு மணி வரைமட்டுமே ஓட்டல்கள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்றும், பட்டாசு வெடிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் மைசூரு நகரில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


Next Story