பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியை கடுமையாக சாடிய ஜெய்சங்கர்


பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியை கடுமையாக சாடிய ஜெய்சங்கர்
x

கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ இந்தியா வருகை தந்துள்ளார்.

பானஜி,

கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ இந்தியா வருகை தந்துள்ளார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளியுறவுத்துறை மந்திரிகளை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய ஜெய்சங்கர், ஷாங்காய் ஒத்துழை மாநாட்டில் உறுப்பினர் என்ற அடிப்படையில் மட்டுமே பூட்டோ சர்தாரி வருகை தந்துள்ளார். அதைத்தாண்டி வேறு எதையும் இதில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை" என்றார். மேலும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நியாயப்படுத்தும் நபர் பூட்டோ சர்தாரி என்றும் பயங்கரவாத தொழிற்சாலையின் செய்தி தொடர்பாளர் எனவும் கடுமையாக சாடினார்.


Next Story