சபரிமலை அய்யப்பன் கோவிலில் 24 நாட்களில் ரூ.125 கோடி வருமானம்


சபரிமலை அய்யப்பன் கோவிலில் 24 நாட்களில் ரூ.125 கோடி வருமானம்
x

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 24 நாட்களில் ரூ.125 கோடி வருவாய் கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கை, அப்பம், அரவணை பிரசாத விற்பனை மூலம் 135 கோடி கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தலைவர் கூறியுள்ளார்.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்ட 24 நாட்களில் வருமானம் ரூ.125 கோடியாக உயர்ந்துள்ளது.

திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் சபரிமலை சன்னிதானத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலையில் 10-ந்தேதி (அதாவது நேற்று) வரை 16.5 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த சீசனில் கடந்த 9-ந் தேதி அதிகபட்சமாக 1 லட்சத்து 10 ஆயிரத்து 133 பேர் தரிசனம் செய்துள்ளனர்.

சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. அதன்படி கடந்த 24 நாட்களில் நடை வருமானம் மற்றும் காணிக்கையாக ரூ.125 கோடி கிடைத்துள்ளது. வரும் நாட்களில் தரிசனத்திற்காக தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர்.

அடுத்த ஆண்டு முதல் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அரவணை டின்களை சொந்தமாக தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதை தொடர்ந்து குழந்தைகளுக்கு பிரச்சினையின்றி எளிய தரிசனத்திற்கு வசதி செய்யப்படும். வருகிற 27-ந் தேதி வரை தேவைப்படும் அரவணை, அப்பம் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story