பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு


பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு
x

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சபரிமலை,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (26-ந் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.இருப்பினும் நாளை வேறு பூஜைகள் எதுவும் நடை பெறாது. மறுநாள் (27-ந்தேதி) காலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும். அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவடைகிறது.


Next Story