கிரிக்கெட் ஜாம்பவானிடம் மாட்டிக்கொண்ட சூரியன்...!


கிரிக்கெட் ஜாம்பவானிடம் மாட்டிக்கொண்ட சூரியன்...!
x

கோல்ஃப் மைதானத்தில் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் சில புகைப்படங்களை சச்சின் தெண்டுல்கர் பகிர்ந்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட்ஜாம்பவான் என அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர். முறியடிக்க முடியாத பல சாதனைகளை கிரிக்கெட்டில் நிகழ்த்திவர். கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் தற்போது நாடாளுமன்ற சிறப்பு எம்.பி. ஆக உள்ளார். மேலும் பொழுது போக்கிற்காக கோல்ஃப் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தநிலையில் சமீபத்தில் கோல்ஃப் மைதானத்தில் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் சில புகைப்படங்களைப் அவர் பகிர்ந்துள்ளார். புகைப்படங்களின் தொகுப்பில், சச்சின் சூரியனை விழுங்குவது போல் தத்ரூபமாக உள்ளது. சச்சினின் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பரபரப்பாக பகிர்ந்து வருகிறார்கள்.


Next Story