அமர்நாத் யாத்திரை சென்றவர்களிடம் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலி பதிவுச்சீட்டுகள் விற்பனை - 3 பேர் கைது


அமர்நாத் யாத்திரை சென்றவர்களிடம் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலி பதிவுச்சீட்டுகள் விற்பனை - 3 பேர் கைது
x

சுமார் 430 யாத்திரீகர்கள் போலியான பதிவுச்சீட்டுகளை பெற்று வந்திருப்பது கண்டறியப்பட்டது.

ஸ்ரீநகர்,

இமயமலை தொடரில் காஷ்மீரில் இயற்கையாக உருவாகும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருவர். கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரத்து 800 அடி உயரத்தில் அமைந்து இருக்கும் இந்த குகை கோவிலுக்கு இந்த ஆண்டு செல்வதற்கான யாத்திரை, ஜூலை 1-ந் தேதி(நேற்று) தொடங்கி வரும் ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்கள் அமர்நாத் கோவில் இணையதளம் மூலமாகவோ, அல்லது நேரடி பதிவு மையங்கள் மூலமாகவோ முன்பதிவு செய்து பதிவுச்சீட்டை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதிவுச்சீட்டுள் கத்துவா, சம்பா உள்ளிட்ட இடங்களில் சோதனைச் சாவடிகளில் பரிசோதனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்றைய தினம் சுமார் 430 யாத்திரீகர்கள் போலியான பதிவுச்சீட்டுகளை பெற்று வந்திருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் டெல்லியைச் சேர்ந்த ஒரு நபர் மற்றும் அவரது உதவியாளர்கள் 2 பேர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர். பிரிண்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். யாத்திரை செல்லும் பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக பதிவுச்சீட்டை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story