முலாயம் சிங் யாதவ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்


முலாயம் சிங் யாதவ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
x

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

புதுடெல்லி,

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை ஆபத்தான நிலையிலேயே உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக முலாயம் சிங் யாதவ் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மேதாந்தா மருத்துவமனை தெரிவித்துள்ளது. பல்வேறு நிபுணர்களைக் கொண்ட மருத்துவக் குழு முலாயம் சிங் யாதவுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே இருந்து வருவதாகவும் மருத்துவமனை அறிவித்துள்ளது.

1 More update

Next Story