சிவமொக்காவில் தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்
சிவமொக்காவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
சிவமொக்கா;
சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகம் முழுவதும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதேபோல், சிவமொக்காவிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவமொக்கா பழைய சிறைச்சாலை திடலில் உள்ள சுதந்திர பூங்காவில் பந்தல் அமைத்து அவர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் பேசுகையில், மாநிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
Related Tags :
Next Story