என் மகன் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதில் பெருமை! டீக்கடை நடத்தி வரும் சர்காரின் தந்தை மகிழ்ச்சி!


என் மகன் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதில் பெருமை! டீக்கடை நடத்தி வரும் சர்காரின் தந்தை மகிழ்ச்சி!
x

முழங்கையில் காயம் இருந்தபோதிலும் அவர் நாட்டுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

மும்பை,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் சங்கெத் மகாதேவ் சர்கார் பங்கேற்றார்.

55 கிலோ பளு தூக்கும் பிரிவில் கலந்துகொண்ட அவர், மொத்தம் 248 கிலோ தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்து இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து மராட்டிய மாநிலம் சாங்லி பகுதியில், சங்கெத் சர்காரின் தந்தை மகாதேவ் சர்கார் கூறியதாவது, "நான் டீக்கடை மற்றும் பான் பீடா கடை நடத்தி வருகிறேன்.

என்னுடைய மகள் அரியானாவில் நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று மராட்டிய மாநிலத்துக்காக தங்கப்பதக்கம் வென்றார்.

இப்போது என் மகன், காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கத்தை வென்றுள்ளான். இதில் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்."

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவருடைய சகோதரி கூறுகையில், "முழங்கையில் காயம் இருந்தபோதிலும் அவர் நாட்டுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து வெள்ளிப் பதக்கம் வென்று தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர் சங்கெத் மகாதேவ் சர்காருக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Next Story