புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக, சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் வழக்கு ஏப்ரல் 5ம் தேதி விசாரணை


புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக, சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் வழக்கு ஏப்ரல் 5ம் தேதி விசாரணை
x
தினத்தந்தி 24 March 2023 6:10 AM GMT (Updated: 24 March 2023 8:02 AM GMT)

சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை ஆளும் கட்சி தவறாக பயன்படுத்துவதாக, சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 5ம் தேதி விசாரணை நடைபெறும்

புதுடெல்லி

சிபிஐ, அமலாக்க துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக ண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதை எதிர்த்து 14 அரசியல் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளன. இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 5 ந்தேதி நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

தி.மு.க., ரஷ்டிரீய ஜனதா தளம், பாரத் ராஷ்டிர சமிதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சிங்வி ஆஜரானார்.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் இந்த மனு ஏப்ரல் 5ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறி உள்ளார்.


Next Story