ஊரக பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்: மத்திய அரசு விளக்கம்


ஊரக பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்: மத்திய அரசு விளக்கம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 9 Aug 2022 2:04 AM IST (Updated: 9 Aug 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் 19.11 கோடி ஊரகப்பகுதி வீடுகள் உள்ள நிலையில், அதில் 9.94 கோடி (51.99%) வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி பிரஹலாத் சிங் பட்டேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது;

2024-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து ஊரகப்பகுதி வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ஜல்ஜீவன் இயக்கத்தை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது 3.23 கோடி வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இருந்தது. கடந்த 36 மாதங்களில் மேலும் 6.70 கோடி ஊரகப்பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் 19.11 கோடி ஊரகப்பகுதி வீடுகள் உள்ள நிலையில், அதில் 9.94 கோடி (51.99%) வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story