பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

குடகில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடகு:

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா சனிவாரசந்தே போலீஸ் எல்லைக்குட்பட்ட சிவரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவரது மனைவி அக்ஷதா. இந்த தம்பதியின் மகள் வைஷ்ணவி (வயது 13). இவள் சோமவார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த ஒரு வாரமாக வைஷ்ணவி மனமுடைந்து காணப்பட்டாள். இதுதொடர்பாக வைஷ்ணவிடம் அவளது பெற்றோர் விசாரித்தனர். ஆனால், வைஷ்ணவி எதுவும் சொல்லவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று ஜிதேந்திராவும், அக்ஷதாவும் வெளியே சென்றிருந்தனர். வைஷ்ணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். இந்த நிலையில் திடீரென்று வைஷ்ணவி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள். சிறிது நேரம் கழித்து வைஷ்ணவியின் பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வைஷ்ணவி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சனிவாரசந்தே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், வைஷ்ணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வைஷ்ணவி எதற்காக தற்கொலை செய்துகொண்டாள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து சனிவாரசந்தே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story