காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கம் காட்டும் எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ.: பா.ஜனதாவில் இருந்து விலகுகிறார்?


காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கம் காட்டும் எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ.: பா.ஜனதாவில் இருந்து விலகுகிறார்?
x
தினத்தந்தி 9 Oct 2023 12:15 AM IST (Updated: 9 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தலைவர்களுடன் எஸ்.டி.சோமசேகர் நெருக்கம் காட்டி வருகிறாா். இதனால் அவர் பா.ஜனதாவில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு யஷ்வந்தபுரம் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் எஸ்.டி.சோமசேகர். இவர், ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்திருந்தார். இந்த நிலையில், எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. மீண்டும் காங்கிரசில் இணைய போவதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை எஸ்.டி.சோமசேகர் சந்தித்து பேசி இருந்தார்.

அத்துடன் ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன், நாடாளுமன்ற தேர்தலில் பா..ஜனதா கூட்டணி அமைப்பதற்கு எஸ்.டி.சோமசேகர் பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித்து பேசி இருந்தார். பா.ஜனதா மீது தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வருவதால், அவரை சமாதானம் செய்யும் பொறுப்பு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அத்திப்பள்ளியில் பட்டாசு விபத்து நடந்த பகுதியை பார்வையிட நேற்று முதல்-மந்திரி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரிகள் சென்றிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து எஸ்.டி.சோமசேகரும் சென்றிருந்தார். காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து, அவரும் பட்டாசு வெடித்த பகுதிகளை பார்வையிட்டார். சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாருடன் பேசியபடியே அவர் இருந்தார்.

இதன் காரணமாக பா.ஜனதா மீது தனக்கு இருக்கும் அதிருப்தியை எஸ்.டி.சோமசேகர் மீண்டும் பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார். காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வரும் அவர், பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் கூடிய விரைவில் சேரலாம் என்ற தகவல்களும் பரவி வருகிறது.


Next Story